Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: திரு. டிரம்ப்பை எதிர்த்து திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது

அமெரிக்க அதிபர் தேர்தல்: திரு. டிரம்ப்பை எதிர்த்து திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது 

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் திரு. ஜோ பைடன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

நவம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து, திரு. பைடன் போட்டியிடுவார்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தைப் பெற, ஒரு வேட்பாளர் குறைந்தது 1,991 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற வேண்டும்.

இந்த வாரத் தொடக்கத்தில், 7 மாநிலங்களிலும், கொலம்பியா வட்டாரத்திலும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முதற்கட்ட வாக்கெடுப்புகள் நடைபெற்றன.

அவற்றின் முடிவுகள் நேற்று வெளியாயின.

வாக்கெடுப்புகளில் கிடைத்த ஆதரவால், ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார் திரு. பைடன்.

அவருக்கு முக்கியப் போட்டியாய் விளங்கிய திரு. பெர்னி செண்டர்ஸ் ஏப்ரல் மாதம் போட்டியிலிருந்து விலகினார்.

அதனால் திரு. பைடன் அதிபர் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவார் என்று அப்போதிலிருந்தே நம்பப்பட்டது.

மக்களின் வாக்குகளைப்பெற நாள்தோறும் போராடவிருப்பதாகத் திரு. பைடன் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில், வேட்பாளர்கள் 20க்கும் அதிகமானோர் போட்டியில் இருந்தனர்.

ஆனால் அவர்களின் வெற்றி வாய்ப்பு மங்கியதால், ஒருவர் பின் ஒருவராக அவர்கள் போட்டியிலிருந்து விலகினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்