Images
  • test kit
    (படம்:  Tolga AKMEN/AFP)

அமெரிக்காவில் COVID-19 கிருமித்தொற்றுக்கான சோதனைக்கருவிகளில் கோளாறு

அமெரிக்காவின் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சோதனைக்கருவிகளில், கோளாறு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 COVID-19 கிருமியைக் கண்டறிவதற்காக, அமெரிக்கா முழுவதும் உள்ள ஆய்வுக்கூடங்களுக்குச் சுமார் 200 சோதனைக் கருவிகள் விநியோகம் செய்யப்பட்டன.

அமெரிக்காவில் தற்போது 13 பேர் அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றைத் துரிதமாகக் கண்டறியும் நோக்கில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் சோதனைக்கருவிகளைத் தயாரித்தது.

இருப்பினும், கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் அறைகுறையான முடிவுகளைப் பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கிருமித்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதைக் கருவியால் கண்டறிய முடியவில்லை என்று நிலையத்தின் மூத்த அதிகாரி கூறினார்.

தற்போது, Georgia மாநிலத்தில் உள்ள Atlanta நகரில் பாதிக்கப்பட்ட அனைவரின் மாதிரிகளையும் சோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்கா, முன்பதிவுசெய்துகொண்ட 36 நாடுகளுக்கு சுமார் 800 முறை பயன்படுத்தக்கூடிய சோதனைக்கருவிகளை அனுப்பிவைக்கிறது. 

Top