Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

TikTok செயலிக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த தடை அமெரிக்க மத்திய நீதிபதியால் தற்காலிக ரத்து

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், TikTok செயலியை  அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய விதித்திருந்த தடையை அந்நாட்டின் மத்திய நீதிபதி தற்காலிமாக ரத்து செய்துள்ளார். 

வாசிப்புநேரம் -
TikTok செயலிக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த தடை அமெரிக்க மத்திய நீதிபதியால் தற்காலிக ரத்து

(கோப்புப் படம்:REUTERS/Dado Ruvic)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், TikTok செயலியை அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்ய விதித்திருந்த தடையை அந்நாட்டின் மத்திய நீதிபதி தற்காலிமாக ரத்து செய்துள்ளார். சிங்கப்பூர் நேரப்படி அந்தத் தடை இன்று நண்பகலுக்குச் சற்று முன்னர் நடப்பிற்கு வர வேண்டியது. 

சுமார் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்தச் செயலி சேகரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அதனைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அந்தத் தகவல்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போய்ச் சேரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

TikTok உரிமையாளர் ByteDance, அமெரிக்கத் சந்தையில் அந்தச் செயலி தொடர்ந்து கிடைப்பதற்கு நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தடையைத் தற்காலிகமாக ரத்து செய்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்