Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: விமானச் சோதனைச் சாவடிகளில் ஆக அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

அமெரிக்க விமான நிலையச் சோதனைச் சாவடிகளில் சென்ற ஆண்டு சுமார் 4,500 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: விமானச் சோதனைச் சாவடிகளில் ஆக அதிகமான துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

படம்: AFP

அமெரிக்க விமான நிலையச் சோதனைச் சாவடிகளில் சென்ற ஆண்டு சுமார் 4,500 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தின் 18 ஆண்டு கால வரலாற்றில் அது ஆக அதிக எண்ணிக்கை.

2018ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 5 விழுக்காடு அதிகம்.

பயணிகள் அவற்றைத் தங்கள் உடலிலிலோ, கையில் எடுத்துச் செல்லும் பைகளிலோ  மறைத்துவைத்திருந்தனர்.

அவற்றில் 87 விழுக்காட்டுத் துப்பாக்கிகள் தோட்டாக்களைக் கொண்டிருந்தன.

அத்தகைய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவலையளிப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அமெரிக்காவில் சோதனைச் சாவடிகளுக்கு  ஆயுதங்களைக் கொண்டுவருவது குற்றம். அதற்கு 13,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஆனால் முறையான அனுமதியுடன் துப்பாக்கிகளைப் பயணப் பெட்டிகளில் எடுத்துச் செல்லலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்