Images
  • Trump (2)
    (கோப்புப் படம்: Reuters / Kevin Lamarque)

அமெரிக்காவின் நற்பெயர் இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளது: கருத்தாய்வு

உலகின் மற்ற ஜனநாயக வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்காவின் நற்பெயர் இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளதாகக் கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

Pew Research Center எனும் ஆய்வு நிலையம், இவ்வாண்டு ஜூன் 10 லிருந்து கடந்த மாதம் 3-ஆம் தேதி வரை கருத்தாய்வு நடத்தியது.

13 நாடுகளைச் சேர்ந்த 13,273 பேர் அதில் பங்கேற்றனர்.

அமெரிக்கா முழுவதும் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்த நேரத்தில் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

அதில், தென் கொரியா மட்டுமே, அமெரிக்காவுக்கு ஆக அதிகச் சாதகமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது.

தென் கொரியா-59%
பிரான்ஸ் - 31%
ஜெர்மனி - 26%
பிரிட்டன்- 41%

கிருமித்தொற்றைக் கையாண்ட விதம் அமெரிக்காவின் நற்பெயர் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்றால் உலக அளவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.

உலக அளவில் கருத்தாய்வில் பங்கேற்ற 15 விழுக்காட்டினர் மக்கள் மட்டுமே, அமெரிக்கா கிருமிப்பரவலை முறையாகக் கையாண்டதாகக் கூறினர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதிகபட்சம் 25 விழுக்காட்டினர் மட்டுமே திரு. டிரம்ப் மீது நம்பிக்கை தெரிவித்தனர்.

ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல் (Angela Merkel) மீதும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீதும் மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
 

Top