Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியாவுக்கான எல்லாவிதப் பயணங்களையும் தவிர்க்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது

இந்தியாவுக்கான எல்லாவிதப் பயணங்களையும் தவிர்க்குமாறு, அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

இந்தியாவுக்கான எல்லாவிதப் பயணங்களையும் தவிர்க்குமாறு, அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கத் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிலையம், அந்த ஆலோசனையை விடுத்தது.

இந்தியாவுக்கு எதிராக அது, ஆக உயரிய 4ஆம் நிலைப் பயண ஆலோசனையை விடுத்தது.

இந்தியாவில் தற்போது நிலவும் சூழலால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும்-கூட, கிருமி தொற்றும் ஆபத்து ஏற்படலாம் என வாஷிங்டன் குறிப்பிட்டது.

இந்தியாவுக்கான பயணத்தைத் தவிர்க்கமுடியவில்லை என்றால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அங்கு செல்லுமாறு நிலையம் பரிந்துரைத்தது.

முன்னதாக, பயணத் தடை விதிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை உலகின் 80 விழுக்காட்டு நாடுகளுக்கு உயர்த்தப்போவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்