Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

(படம்: AFP / ATTA KENARE)

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7ஆவது முறையாக நடைபெறவிருந்த சந்திப்பு, ஈரான் பேராளர்க் குழுவுடன் வியன்னாவில் இடம்பெறவிருந்தது.

2015இல் செய்துகொண்ட அணுவாயுத ஒப்பந்தத்தை மீண்டும் நடப்புக்குக் கொண்டுவருவதில் ஈரான் ஆர்வங்காட்டுவதாகத் தெரியவில்லை என்பதால் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறியுள்ளார்.

இருதரப்புக்கும் இடையிலான அரசதந்திர வழிகள் தோல்வியுற்றால் வாஷிங்டன் வேறு உத்திகளை ஆராயும் என்று அவர் சொன்னார்.

2015இல் செய்யப்பட்ட ஒப்பந்தம் ஈரானின் அணுவாயுதத் திட்டம் மீது விதிக்கப்பட்ட அனைத்துலகத் தடைகளைத் தளர்த்த உதவியிருந்தது.

ஆனால் அதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நிலுவையில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்