Images
  • capitol dome
    (படம்: REUTERS/Joshua Roberts)

அமெரிக்கா: செய்தியாளர்களுக்கு ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதன் தொடர்பில் அதிகாரி கைது

அமெரிக்கத் தற்காப்புப் புலனாய்வு அமைப்பின் பயங்ரவாத முறியடிப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களுக்கு ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதன் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

ஹென்ரி கைல் ஃரிஸ் (Henry Kyle Frese) என்ற முப்பது வயது அதிகாரி வெர்ஜீனியாவில் உள்ள அலுவலகத்துக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சொந்த லாபத்துக்காக ரகசியத் தகவல்களைக் கசிய விட்டதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

என்ன மாதிரியான ரகசியத் தகவல்களை அவர் கசிய விட்டார் என்பதை வெளியிட மறுத்த அமெரிக்க நீதித்துறை, அது வெளிநாட்டு ஆயுதமுறை பற்றியது என்று மட்டும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரி தகவல் கசியவிட்டதாகச் சொல்லப்படும் செய்தியாளர்களின் விவரமும் வெளியிடப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கசிய விடப்பட்டட ஒவ்வொரு தகவலுக்கும் ஃரிஸுக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.


 

Top