Images
  • air crash usa marine
    (படம்; AFP/EPA)

ஜப்பானில் விழுந்துநொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானங்கள் - 6 ராணுவ வீரர்கள் காணவில்லை

அமெரிக்காவின் கடற்படை விமானங்கள் ஜப்பானில் விழுந்துநொறுங்கியதில் ராணுவ அதிகாரிகள் ஆறு பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீட்கப்பட்டிருப்பதாக ஜப்பானிய தற்காப்பு அமைச்சு கூறியிருக்கிறது.

விமானம் விழுந்ததன் தொடர்பில் விசாரணை தொடங்கிவிட்டது.

தென் ஜப்பானின் இவாகுனி (Iwakuni) நகரில் எரிபொருள் நிரப்பிய பிறகு கிளம்பிய அமெரிக்க விமானங்கள் விழுந்ததாகக் கூறப்பட்டது.

இரண்டு விமானங்களிலும் அதிகாரிகள் ஏழு பேர் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானது. 

Top