Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமில்லாதோரை ஊக்குவிக்கப் புதிய முயற்சி

அமெரிக்காவின் தடுப்பூசித் திட்டம் மெதுவடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமில்லாதோரை ஊக்குவிக்கப் புதிய முயற்சி

படம்: AFP / JIM WATSON

அமெரிக்காவின் தடுப்பூசித் திட்டம் மெதுவடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதும் அவசரம் காட்டாததும் அங்கு பெரிய சிக்கல்களாக உருவெடுத்துள்ளன.

அவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்றை வெள்ளை மாளிகை தொடங்கியுள்ளது.

மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுவிடவேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் முன்னதாக இலக்கு நிர்ணயித்திருந்தார்.

ஆனால் அதனை எட்டுவதற்கான வாய்ப்புகள் இப்போது குறைவாகவே உள்ளன.

இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெரியவர்களில் சுமார் 15.5மில்லியன் பேர் அடுத்த 4 வாரங்களில் ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.

அப்போதுதான் அதிபர் பைடனின் இலக்கை எட்டமுடியும் என்று கூறப்படுகிறது.

இப்போதுள்ள நிலையில் நாள்தோறும் 400-க்கும் குறைவான அமெரிக்கர்களே தடுப்பூசி போடச் செல்கின்றனர்.

2 மாதங்களுக்கு முன்பு, அன்றாடம், அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 மில்லியனாக இருந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்