Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு: அடுத்த மாத மத்தியில் இடம்பெறலாம் - அதிபர் டிரம்ப்

அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இடம்பெறலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு: அடுத்த மாத மத்தியில் இடம்பெறலாம் - அதிபர் டிரம்ப்

(படம்: AFP/Saul Loeb)

அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரம்ப்-கிம் இரண்டாம் உச்சநிலைச் சந்திப்பு பிப்ரவரி மாதத்தின் மத்தியில் இடம்பெறலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

உச்சநிலைச் சந்திப்பு எங்கு இடம்பெறும் எனும் கேள்வி எழுந்திருக்கும் வேளையில் அது வியட்நாமில் இடம்பெறும் என ஜப்பானிய நாளிதழான Yomirui Shimbun குறிப்பிட்டிருக்கிறது.

சந்திப்பு இடம்பெறும் நாள், இடம்குறித்து வடகொரியா பரிசீலனை செய்துவருகிறது.

சந்திப்புகுறித்து வடகொரியா மேற்கொண்டு விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் அணுவாயுதக் களைவு முற்றிலும் நிறைவேற்றப்படும் என வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உறுதியளித்திருக்கிறார்.

அதற்குப் பதிலாக வாஷிங்டனிடமிருந்து பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரியிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்