Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வடகொரியாவுடன் அணுவாயுதப் பேச்சு தொடரும்: அமெரிக்கா நம்பிக்கை

வடகொரியா அணுவாயுதப் பேச்சுவார்த்தையைக் கைவிட மிரட்டல் விடுத்துள்ள போதும், பேச்சுவார்த்தை தொடரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
வடகொரியாவுடன் அணுவாயுதப் பேச்சு தொடரும்: அமெரிக்கா நம்பிக்கை

(படம்: Leah Millis/Reuters]

வடகொரியா அணுவாயுதப் பேச்சுவார்த்தையைக் கைவிட மிரட்டல் விடுத்துள்ள போதும், பேச்சுவார்த்தை தொடரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இருவருக்கும் இடையே, கடந்த மாதம் நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்பு, கருத்து வேறுபாடுகளுடன் முடிவடைந்தது.

அணுவாயுதக் களைவு, வட கொரியா மீதான தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில், இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தனர்.

அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியாவின் முக்கிய அணுவாற்றல் வசதிகளில் நடவடிக்கை ஏதும் தென்படவில்லை என்று அமெரிக்கக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கூறுகிறது.

இருப்பினும், அமெரிக்கா முன்வைத்த கோரிக்கைகளை வடகொரியா நிராகரிப்பதாக, வடகொரியாவின் வெளியுறவுத் துணையமைச்சர் நேற்றுக் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்