Images
  • wheeler
    (கோப்புப் படம்: Kevin Dietsch/Pool via REUTERS)

அமெரிக்கச் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தைவானுக்கு அதிகாரத்துவப் பயணம்

அமெரிக்கச் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையத் தலைவர் ஆண்ட்ரூ வீலர் (Andrew Wheeler) அதிகாரத்துவப் பயணமாகத் தைவான் செல்லவிருக்கிறார்.

தைவான் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் அடுத்த மாத முதல் வாரத்தில் அங்கு செல்கிறார்.

அனைத்துலக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் தொடர்பில் அவர் தைவானுடன் கலந்துரையாடுவார்.

இந்த ஆண்டு தைவானுக்குச் செல்லும் அமெரிக்க உயர் அதிகாரிகளில் அவர் மூன்றாமவர்.

ஆகஸ்டில், அமெரிக்கச் சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அஸார் (Alex Azar) தைவான் சென்றிருந்தார்.

செப்டம்பரில் துணையமைச்சர் திரு. கீத் க்ரக் (Keith Kruck) அங்கு சென்றிருந்தார்.

அந்த வரிசையில், திரு. வீலரின் தைவானியப் பயணம் சீனாவுக்கு சினமூட்டக்கூடும் என்று கருதப்படுகிறது. 

Top