Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - அமெரிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள்

 தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - அமெரிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள் 

வாசிப்புநேரம் -
தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் - அமெரிக்கர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள்

(கோப்புப் படம்: REUTERS/Brendan McDermid)

கிருமிப்பரவல் மோசமடையும் சூழலில் அமெரிக்கர்கள் தயவு செய்து வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்குமாறு அங்குள்ள அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அது மருத்துவ நிபுணர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் சுட்டினர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுக்காகச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 30 மாநிலங்களில், நோய்த்தொற்றுச் சிகிச்சைக்காக இந்த மாதம் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் நாள்தோறும் சராசரி 171 ஆயிரம் பேருக்குப் புதிதாக நோய்த்தொற்று அடையாளம் காணப்படுகிறது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, நல்ல சுகாதாரப் பழக்கவழங்கங்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்