Images
  • Nikki Haley
    ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி,. (படம்: Reuters)

ரஷ்ய, வடகொரிய வங்கிகள் மீதான தடைகள் நீக்கப்படலாம் : அமெரிக்கா

ரஷ்ய, வடகொரிய வங்கிகள் மீதான தடைகளை நீக்கத் திட்டமிடுவதாக, ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி (Nikki Haley) கூறியிருக்கிறார்.

வடகொரியா மீதான தடைகள் தொடர்பில் இடம்பெற்ற உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்குப் பிறகு, திருமதி ஹேலி அந்தத் தகவலை வெளியிட்டார்.

இருப்பினும், அமெரிக்கா அதன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்றார் ஹேலி.

அணுவாயுதங்களைக் கைவிடுவதன் மூலம் ஆக்ககரமான நடவடிக்கை மேற்கொள்வது தற்போது பியோங்யாங்கின் முறை என்றார் அவர்.

பியோங்யாங் ஏவுகணைச் சோதனைகளை நிறுத்த முன்வந்ததைப் பாராட்டும் வகையில், அதன்மீதான தடைகள் தளர்த்தப்படவேண்டும் என்று ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்திவருகின்றன.

ஆனால், அணுவாயுத-ஏவுகணைத் திட்டங்கள் முழுமையாகக் கைவிடப்படும்வரை தடைகள் நடப்பிலிருக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.

வடகொரியாவின் நல்லெண்ணத்தைப் பெற ரஷ்யா முனைந்துள்ளதாகத் திருமதி ஹேலி சாடினார்.

இவ்வேளையில், வடகொரியாவுக்கு மனிதநேய உதவிகளை அனுப்புவது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதை அமெரிக்கா தாமதப்படுத்திவருகிறது.

விவசாயத்துக்குத் தேவைப்படும் Tractor போன்ற கருவிகள், சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான உதிரி பாகங்கள், நிவாரணப் பொருள்கள் உள்ளிட்டவை அந்த மனிதநேய உதவிகளில் அடங்கும். 

Top