Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் மாண்டுபோவதாகக் கணிப்பு

அமெரிக்காவில் கிருமித்தொற்று காரணமாக நேற்று 1,440க்கும் அதிகமானோர் மாண்டனர். அது, ஒரு நிமிடத்துக்கு ஒருவர் மாண்டுபோவதற்குச் சமம் Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் மாண்டுபோவதாகக் கணிப்பு

(படம்: Reuters/Maria Alejandra Cardona)

அமெரிக்காவில் கிருமித்தொற்று காரணமாக நேற்று 1,440க்கும் அதிகமானோர் மாண்டனர். அது, ஒரு நிமிடத்துக்கு ஒருவர் மாண்டுபோவதற்குச் சமம் Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்காவில் கிருமித்தொற்று காரணமாக மாண்டோரின் எண்ணிக்கை 151,000ஐத் தாண்டியுள்ளது. உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் ஆக அதிகமான மரணம். கடந்த 11 நாள்களில்-மட்டும் 10,000பேர் மாண்டனர்.

செவ்வாய்க்கிழமை, ஃபுளோரிடா (Florida), அர்க்கன்ஸா (Arkansas), கலிஃபோர்னியா (California), மொண்டானா
(Montana), ஆரெகன்
(Oregon), டெக்ஸஸ் (Texas) ஆகிய ஆறு மாநிலங்களில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் மாண்டனர். டெக்ஸஸில், இந்த மாதம் மட்டும் 4,000 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்