Images
  • Us
    படம்: REUTERS 

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நில எல்லைகளை அடுத்த மாதம் திறக்கிறது அமெரிக்கா

அமெரிக்கா முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அடுத்த மாதம் முதல் அதன் நில எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

அதன்மூலம் கனடா, மெக்சிக்கோவிலிருந்து பயணிகள் இனி நிலம் வழி அமெரிக்காவிற்குள் செல்ல முடியும்.

COVID-19 நோய்ப்பரவல் காரணமாக அமெரிக்கா கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அதன் நில எல்லைகளை மூடியது.

அதனால் மிக அவசியமான பயணங்களுக்கு மட்டும்தான் நிலம் வழி பயண அனுமதி வழங்கப்பட்டது.

புதிய அறிவிப்பின் மூலம் சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு கனடா, மெக்சிக்கோவைச் சேர்ந்தோர் இனி எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவிற்குள் நிலம் வழி செல்லமுடியும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு நிலம் வழி நாட்டிற்குள் வர அனுமதி இல்லை என்பதையும் அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

- Reuters/aj 

Top