Images
  • moderna
    (கோப்புப் படம்: Reuters/Carlos Osorio)

நூற்றுக்கணக்கான Moderna தடுப்பபூசிகளைச் சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட மருந்தியல் நிபுணருக்குச் சிறைத்தண்டனை

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்தியல் நிபுணர் ஒருவர், Moderna நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான COVID-19 தடுப்பூசிகளைச் சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்டீவன் R. பிரெண்டன்பர்க் (Steven R. Brandenburg) என்ற அந்த 46 வயது நிபுணருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Moderna தடுப்புமருந்து, பயன்படுத்தப்படும் வரை குறிப்பிட்ட தட்பநிலையில் வைத்திருக்கப்பட வேண்டும்.

ஸ்டீவன், குளிர்பதனப் பெட்டியிலிருந்து வேண்டுமென்றே தடுப்புமருந்துக் குப்பிகளை அகற்றியதாகக் கூறப்பட்டது. அதோடு, வெளியே சில மணி நேரம் வைத்திருந்த பிறகு, மீண்டும் அவற்றை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார்.

மறுநாள் மொத்தம் 57 பேருக்கு அந்தக் குப்பிகளைப் பயன்படுத்தித் தடுப்பூசி போடப்பட்டது.

அந்தச் சம்பவம் சென்ற டிசம்பர் மாதத்தில் நடந்தது.

கிருமிப்பரவல் சமயத்தில் வேண்டுமென்றே தடுப்புமருந்தைச் சேதப்படுத்தியது மிகக் கடுமையான குற்றம் என நீதிமன்றம் சுட்டியது.

பிரெண்டன்பர்க், தான் பணிபுரிந்த விஸ்கான்சின் மருத்துவமனைக்கு இழப்பீடாக 83,800 டாலரை வழங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

Top