Images
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு விரைவில் துடைத்தொழிக்கப்படும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைத் துடைத்தொழிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
அதன் தொடர்பில் கூடுதலாகப் பங்களிக்குமாறு, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நட்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.
சிரியாவில் பயங்கரவாதிகளின் வசமிருக்கும் அனைத்துப் பகுதிகளும் விரைவில் மீட்கப்படும் என அவர் உறுதிதெரிவித்தார்.
அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம் என்றும் திரு. டிரம்ப் கூறினார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைத் துடைத்தொழிப்பது குறித்த வழிகள் பற்றி ஆராய சுமார் 70 நாடுகளின் அதிகாரிகள் வாஷிங்டனில் கூடினர்.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைத் தோற்கடித்துவிட்டதாகக் கூறி 2,000 படைவீரர்களை சிரியாவிலிருந்து மீட்டுக்கொள்வதாகக் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்தது.

