Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கழுத்தில் கால்வைத்து காவல்துறை அதிகாரி கட்டுப்படுத்தியதால் மாண்ட ஆடவர் - வன்முறை வெடித்துள்ள நகரம்

அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட கருப்பின ஆடவரின் கழுத்தில் கால்வைத்துக் கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

வாசிப்புநேரம் -
கழுத்தில் கால்வைத்து காவல்துறை அதிகாரி கட்டுப்படுத்தியதால் மாண்ட ஆடவர் - வன்முறை வெடித்துள்ள நகரம்

(படம்: Darnella Frazier/Facebook)

அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட கருப்பின ஆடவரின் கழுத்தில் கால்வைத்துக் கட்டுப்படுத்திய காவல்துறை அதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

கைதுசெய்யப்பட்ட George Floydஐத் தரையில் தள்ளி அவரின் கழுத்தில் அதிகாரி முட்டிக்காலை வைத்துத் தடுத்ததால் மூச்சுத்திணறி மாண்டார் ஆடவர்.

சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படும் முன்னர் முகக் கவசங்கள் அணிந்த நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டனர்.

கற்கள், தண்ணீர் போத்தல்கள் போன்ற பலவற்றை, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை அதிகாரிகள் மீது வீசினர்.

பலர் கடைகளிலிருந்து பொருள்களைச் சூறையாடத் தொடங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதி காக்குமாறு Minneapolis நகரக் காவல்துறைத் தலைவர் கூறினார்.

மத்திய புலானய்வுப் பிரிவு சம்பவத்தை விசாரித்து வருகிறது.

ஆடவரை இவ்வளவு வல்லந்தமாகக் கட்டுப்படுத்துவதற்குக் காரணமில்லை என்று சுட்டிய அந்நகர மேயர், காவல்துறை அதிகாரிமீது குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்றார்.

கள்ள நோட்டைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் Floydஐ அதிகாரிகள் கைதுசெய்யும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. தம்மால் மூச்சுவிட முடியவில்லை என்று கதறும் ஆடவர் சற்று நேரம் கழித்து சுயநினைவை இழக்கிறார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆடவர் பின்னர் மாண்டார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்