Images
  • Eggs
    படம்: Pixabay/Fabrizio Bucella

அமெரிக்கா: 207 மில்லியன் முட்டைகள் மீட்பு

நார்த் கரோலைனா மாநிலத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றிலிருந்து விநியோகிக்கப்பட்ட சுமார் 207 மில்லியன் முட்டைகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அவை அமெரிக்காவின் 9 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன. 22 பேர் நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து முட்டைகள் மீட்டுக் கொள்ளப்பட்டதாக மத்திய உணவு, மருந்து நிர்வாகப் பிரிவு தெரிவித்தது.

salmonella braenderup என்னும் உயிரினத்தால் முட்டைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறு பிள்ளைகள், மூத்தோர், நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு கொண்டவர்கள் ஆகியோர் அதனால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

2010ஆம் ஆண்டிற்கு பிறகு, அமெரிக்காவில் இடம்பெற்ற ஆகப் பெரிய முட்டை மீட்பு நடவடிக்கை இது.


Top