Images
  • US Russia (1)
    (படம்: AFP)

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டங்களை அமெரிக்கா மீட்டுக்கொண்டுள்ளது

ரஷ்யா மீது புதிய தடைகளை விதிப்பதற்கான திட்டங்களை அமெரிக்கா மீட்டுக்கொண்டுள்ளது.

சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரசாயனத் தாக்குதலில் ரஷ்யாவின் ஈடுபாட்டுக்காக அதற்குப் புதிய தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வந்தது.

அந்தத் தடைகளை விதிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இப்போது முடிவெடுள்ளதாக, Washington Post நாளிதழ் தகவல் அளித்தது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி அதனை அண்மையில் அறிவித்தார்.

அவ்வாறு தடைகளை விதித்தால், ரஷ்யா மேற்கொள்ளக்கூடிய பதில் நடவடிக்கைகள் பற்றி திரு டிரம்ப் அக்கறை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்து

Top