Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீட்டுக்கொண்டது சரியான நடவடிக்கை : அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) தற்காத்துப் பேசியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்பினரை மீட்டுக்கொண்டது சரியான நடவடிக்கை : அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

(படம்: AFP)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) தற்காத்துப் பேசியுள்ளார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு துருப்பினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது சரியான நடவடிக்கையே என்றார் அவர்.

செனட் சபையின் வெளியுறவுத் தொடர்புக் குழு உறுப்பினர்கள், அது குறித்து சினமடைந்து குறைகூறியபோது அவர் அவ்வாறு சொன்னார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து, முறையான தகவல் பெற்று அமெரிக்க வேவுத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று செனட்டர் மார்கோ ருபியோ (Marco Rubio) வினவினார்.

தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து மக்களை விரைவில் வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளாததற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சு மீது குறைகூறப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்கத் துருப்பினரின் வெளியேற்றத்தை வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் தொடர்ந்து தற்காத்துப் பேசினார்.

ஆப்கான் பெண்கள், சிறுமிகள் தொடர்பான விவகாரம் குறித்த அமெரிக்கக் கொள்கையை மேற்பார்வையிட, மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்