Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க செனட்சபை 250 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய முதலீட்டு மசோதாவுக்கு ஒப்புதல்

அமெரிக்க செனட்சபை 250 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய முதலீட்டு மசோதாவுக்கு ஒப்புதல்

வாசிப்புநேரம் -
அமெரிக்க செனட்சபை 250 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய முதலீட்டு மசோதாவுக்கு ஒப்புதல்

படம்: CNA

அமெரிக்க செனட் சபை 250 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய முதலீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வர்த்தக ரீதியாகச் சீனா கொடுக்கும் போட்டியைக் கையாள்வதில் அந்த மசோதா கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது.

250 பில்லியன் டாலர் தொகையில் 50 பில்லியனுக்கும் அதிகமான நிதி, பகுதி மின்கடத்திகளின் உற்பத்தியில் செலவிடப்படும்.

புதிய மசோதா, 21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று செனட்சபைப் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் (Chuck Schumer) கூறினார்.

அமெரிக்கா அதன் முக்கிய விநியோகக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொள்கிறது.

சீனாவைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைப்பது அதன் இலக்கு.

இந்நிலையில், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை முறியடிக்கும் பணிக்குழுவையும் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உருவாக்கவிருக்கிறது.

மருந்துத் தயாரிப்பு, பகுதி மின்கடத்திச் சில்லுகள், அதிக ஆற்றல் கொண்ட மின்கலன்கள், முக்கிய கனிமங்கள் ஆகியவற்றின் வர்த்தகங்களில் பணிக்குழு கவனம் செலுத்தும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்