Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் காயம்

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலக் கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலக் கடைத்தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 7 பேர் பெரியவர்கள். ஒருவர் பதின்ம வயதினர்.

8 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக மாநிலக் காவல்துறை கூறியது.

அவர்களில் யாருடைய உயிருக்கும் ஆபத்து இருப்பதுபோல் தோன்றவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன.

சம்பவம் நடந்த Mayfair கடைத்தொகுதியில்புலனாய்வு, காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் காவல்துறை தேடிவருகிறது.

சந்தேக நபர் 20 வயதுக்கும்-40 வயதுக்கும் இடைப்பட்ட வெள்ளை இன ஆடவர் என்று காவல்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்