Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: பிரிட்டனுக்கு எதிராக ஆக உயரிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்கா

COVID-19: பிரிட்டனுக்கு எதிராக ஆக உயரிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ள அமெரிக்கா

வாசிப்புநேரம் -

அமெரிக்க வெளியுறவு அமைச்சு, பிரிட்டனுக்கு எதிராக, ஆக உயரிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையமும், அமெரிக்கர்கள் பிரிட்டனுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

இரண்டும் வெளியிட்ட நான்காம் நிலைப் பயண எச்சரிக்கையின்படி, பிரிட்டனுக்குப் பயணம் செய்தே ஆகவேண்டியிருந்தால், முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பது முக்கியம்.

COVID-19 நோய்ப் பரவல் காரணமாக, பிரிட்டனுக்குச் செல்லவேண்டாம் என, வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

கடந்த மே மாதம், பிரிட்டனுக்கு எதிரான பயண ஆலோசனையை, அமெரிக்கா, மூன்றாம் நிலைக்குக் குறைத்தது.

பிரிட்டனில், கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் அன்றாட எண்ணிக்கை, 50,000-க்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்