Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி - தேர்தல் முடிவில் தாக்கம் இருக்குமா ?

அமெரிக்க அதிபர் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி - தேர்தல் முடிவில் தாக்கம் இருக்குமா ? 

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதி - தேர்தல் முடிவில் தாக்கம் இருக்குமா ?

படம்: Reuters

அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்முறை பல அம்சங்களை அந்நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்துவருகின்றனர்.

அதில் ஒன்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியின் நியமனம்.

திருமதி ஏமி கோனி பேரெட் (Amy Coney Barrett) உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நேரத்தில் புதிய நீதிபதியின் பதவிப் பிரமாணம் அதிபர் டோனால்ட் டிரம்ப்புக்கு வெற்றியாகக் கருதப்படுகிறது.

என்ன நடந்தது:

  • கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பெர்க் (Ruth Bader Ginsburg) காலமானார்.
  • பெண்களின் சம உரிமை, ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் குறித்து முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர் அவர்.
  • பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கைக் கொண்டவர் திருமதி கின்ஸ்பெர்க்.
  • காலியாக இருக்கும் நீதிபதியின் பொறுப்புக்கு இன்னொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டி, செனட் சபையில் அவசர முடிவு.
  • ஆனால் அதற்கு ஜனநாயகக் கட்சியினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.
  • அதிபர் டிரம்ப் புதிய நீதிபதியாக 48 வயது திருமதி பேரெட்டை முன்மொழித்தார்.
  • ஜனநாயகக் கட்சியினரின் ஒருமித்த எதிர்ப்பை மீறி,
  • 4 வாக்குகள் வித்தியாசத்தில் திருமதி பேரெட்டின் நியமனத்தை செனட் சபை அங்கீகரித்தது.
  • திருமதி பேரெட் உச்சநீதிமன்ற நீதிபதியாகச் செயல்படுவார்.

திரு டிரம்பின் கருத்துகள்:

  • புதிய நீதிபதியைத் தேர்ந்தெடுப்பது அரசமைப்புச் சட்டத்தின்படி தமது உரிமை
  • வெற்றிடமாக உள்ள நீதிபதி இடத்தை தமது
  • ஆட்சிக்காலத்தில் பூர்த்தி செய்வதுதான் சரி
  • திரு பைடனின் கருத்துகள்:
  • புதிய நீதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் என்ன அவசரம், அடுத்த அதிபர் ஆட்சியில் நீதிபதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • பெண்கள் கருக்கலைப்பு செய்யலாம் என்ற சட்டம் உருவாக்கப்படுவதைத் தடுக்க அதிபர் டிரம்ப் செய்யும் சூழ்ச்சி
  • தாம் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்

ஏன் திருமதி பேரெட் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

  • அமெரிக்க உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கக்கூடிய விவகாரங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையும் ஒன்று.
  • கருக்கலைப்புக்கு நீதிபதி பேரெட்டும் அதிபர் டிரம்பும் எதிரானவர்கள்.
  • திருமதி பேரெட்டை நீதிபதியாக அமர்த்துவதால் 9 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவு பெருகும்.
  • அதனால் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்புகள் குறைவாக இருக்கும். சட்டங்கள் எளிதில் இயற்றப்படலாம்

தேர்தலில் முடிவுகளின் தாக்கம் எப்படி இருக்கும்:

  • திருமதி பேரெட் நீதிபதியாக அமர்த்தப்படுவதை எதிர்த்து சில மாதர்நல அமைப்புகள் அதிபர் டிரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன.
  • கடந்த வாரம் அமெரிக்கா முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
  • அதனால் வரும் தேர்தலில் பெண்கள் வாக்குகளில் திரு டிரம்ப்பிற்கு பெரிய அடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்