Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பொருளியல் உறவை வலுப்படுத்த அமெரிக்காவும் தைவானும் பேச்சுவார்த்தை

பொருளியல் உறவை வலுப்படுத்த அமெரிக்காவும் தைவானும் பேச்சுவார்த்தை

வாசிப்புநேரம் -

அமெரிக்காவும், தைவானும் பொருளியல் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இன்று பேச்சு நடத்தவுள்ளன.

தைவானுடன் உறவை விரிவுபடுத்த பைடன் நிர்வாகம் முனைகிறது.

சீனாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், தைவானுடன் இரண்டாவது முறை பேச்சு நடத்தவிருக்கிறது அமெரிக்கா.

தைவானுடன் எல்லா வகையான அதிகாரபூர்வப் பரிமாற்றங்களையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் அமெரிக்காவிடம் வலியுறுத்தியது.

வாஷிங்டனின் செயல்பாடு, அமெரிக்க - சீன உறவை மோசமாகப் பாதிக்கக்கூடும் என்றும் தைவான் நீரிணையின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கும் என்றும் அது எச்சரித்தது.

அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளத் தைவான் ஆர்வமாக உள்ளது.

சீனாவின் செல்வாக்கை முறியடிக்கும் வகையில், தைவானுடன் பொருளியல் உறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்