Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்லந்தின் ராணுவப் பயிற்சியில் மிகப் பெரிய அமெரிக்கப் படை கலந்துகொண்டுள்ளது

தாய்லந்தில் நடைபெறும் வருடாந்திர ராணுவப் பயிற்சியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அமெரிக்கப் படை கலந்துகொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்தின் ராணுவப் பயிற்சியில் மிகப் பெரிய அமெரிக்கப் படை கலந்துகொண்டுள்ளது

(படம்: REUTERS/Soe Zeya Tun)

தாய்லந்தில் நடைபெறும் வருடாந்திர ராணுவப் பயிற்சியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அமெரிக்கப் படை கலந்துகொண்டுள்ளது.

6,800 அமெரிக்கத் துருப்பினர் Cobra Gold ராணுவப் பயிற்சியில் கலந்துகொண்டனர்.

சென்ற ஆண்டின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க, அது கிட்டத்தட்ட இரு மடங்கு.

சீனா அந்த வட்டாரத்தில் அதன் ஆதிக்கத்தை அதிகரித்துவரும் வேளையில் அமெரிக்காவும் அதன் வலிமையைக் கூட்டும் முயற்சியாக அது கருதப்படுகிறது.

இந்த ஆண்டு அந்தப் பயிற்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11ஆயிரம் பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்