Images
  • Rick Perry
    கோப்புப் படம்: AP Photo/Susan Montoya Bryan

சீனாவுக்கான அணுச்சக்தித் தொழில்நுட்ப ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவிருக்கிறது அமெரிக்கா

சீனாவுக்கான அணுச்சக்தித் தொழில்நுட்ப ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொருளியல் நலனுக்காக அந்தத் தொழில்நுட்பங்கள் களவாடப்படலாம் அல்லது இராணுவப் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் அதற்குக் காரணம்.

சீனாவின் அத்தகைய முயற்சிகளால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு பாதிக்கப்படுவதை அனுமதிக்கமுடியாது என்று அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் ரிக் பெர்ரி (Rick Perry) கூறினார்.

அதிபர் டிரம்ப் நிர்வாகம், சீனா மீதான நெருக்குதலை அதிகரிக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை அது காட்டுவதாகக் கருதப்படுகிறது.

அண்மையில் 250 பில்லியன் டாலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்தது.

இந்நிலையில், சீனாவுக்கு இராணுவமல்லாத பயன்பாட்டுக்கான அணுச்சக்தி ஏற்றுமதிகள் தொடர்ந்து இடம்பெறும் என்றும் ஆனால் அவை கூடுதல் கண்காணிப்புக்குப் பின்னரே அனுமதிக்கப்படுமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான அணு-மின் நிறுவனத்துடன் தொடர்புடைய புதிய உரிமங்கள் மறுக்கப்படலாம் என்றும் அமெரிக்க எரிசக்தித் துறை குறிப்பிட்டது.

 



Top