Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தைவானுக்கு 180 மில்லியன் டாலர் மதிப்புமிக்க Torpedoes ஏவுகணைகளை விற்கும் அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம், 180 மில்லியன் டாலர் மதிப்புமிக்க அதிநவீன Torpedoes ஏவுகணைகளை,  தைவானுக்கு விற்கக்கூடும் என்று நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளது.  

வாசிப்புநேரம் -
தைவானுக்கு 180 மில்லியன் டாலர் மதிப்புமிக்க Torpedoes ஏவுகணைகளை விற்கும் அமெரிக்கா

படம்: AFP/Mandy Cheng

அமெரிக்க அரசாங்கம், 180 மில்லியன் டாலர் மதிப்புமிக்க அதிநவீன Torpedoes ஏவுகணைகளை, தைவானுக்கு விற்கக்கூடும் என்று நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

Torpedoes ஏவுகணைகள், கடலுக்குள் புகுந்துசென்று போர்க் கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் துல்லியமாகத் தாக்கக்கூடியவை. அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் பாய்ச்சமுடியும்.

அமெரிக்காவின் அண்மை அறிவிப்பு, சீனாவுக்குச் சினமூட்டக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையே, மற்ற நாடுகளைப் போல் எந்த ஓர் அதிகாரபூர்வ அரசதந்திர உறவும் இல்லை.

இருப்பினும் ஜனநாயகத்தைப் பின்பற்றும் தைவான், தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதற்கான உதவியை வழங்க, அமெரிக்கா சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ளது.

தைவானுக்கான அமெரிக்க ஆயுத விற்பனையை, சீனா தொடர்ந்து கண்டித்து வந்துள்ளது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்