Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் கழிப்பறை டிஷ்யூத் தாள்கள் மீண்டும் விற்றுத் தீர்ந்துவிட்டன.. பீதியடையும் மக்கள்

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் கழிப்பறை டிஷ்யூத் தாள்கள் மீண்டும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் கழிப்பறை டிஷ்யூத் தாள்கள் மீண்டும் விற்றுத் தீர்ந்துவிட்டன.. பீதியடையும் மக்கள்

(படம்: Reuters)

அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் கழிப்பறை டிஷ்யூத் தாள்கள் மீண்டும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நியூயார்க், கலிஃபோர்னியா (California) உள்ளிட்ட 22 மாநிலங்களில், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அவர்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

அந்த மாநிலங்களில் உள்ள பெரிய பேரங்காடிகளில், டிஷ்யூத் தாள்கள் வைக்கப்படும் பிரிவு காலியாகத் தென்பட்டது.

கிருமிநாசினித் தாள்களும் (disinfecting wipes) விற்றுத் தீர்ந்துவிட்டன.

பீதியடையாதோரும், பொருள்களின் இருப்பு குறைவாக உள்ளதைக் கண்டவுடன், பொருள்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர் என்று அதிகாரிகள் கூறினர்.

அதனால், சில பேராங்காடிகள் பொருள் வாங்குவதற்கான வரம்பை வலியுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், கிருமிப்பரவல் தொடங்கிய காலக்கட்டத்தில் பீதியில் பொருள் வாங்கிக் குவிக்கும் இத்தகைய போக்கு உலகெங்கும் நிலவியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்