Images
  • American airlines
    படம்: REUTERS/Joshua Roberts

சிங்கப்பூர் உள்ளிட்ட 110 நாடுகள், வட்டாரங்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்துகிறது

அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு, தடுப்புநிலையம் சிங்கப்பூர் உள்ளிட்ட
110 நாடுகள், வட்டாரங்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அறிவித்துள்ளது.

நோய்த்தொற்று ஆபத்து அதிகம் என்று பட்டியலிடப்பட்டுப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டாம் என்று குறிப்பிடப்பட்ட 61 நாடுகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.

அந்தப் பட்டியலில் பிரான்ஸ், பிலிப்பீன்ஸ், தென்னாப்பிரிக்கா, கனடா, மெக்சிக்கோ, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

மிதமான ஆபத்து என்று பட்டியலிடப்பட்ட 50 நாடுகள் மீதான கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டு, குறைந்த ஆபத்துள்ள நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தப் பட்டியலில் சிங்கப்பூர், இஸ்ரேல், தென்கொரியா, ஐஸ்லந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

கடந்த மாதம் ஜப்பான் மீது விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா சற்றுத் தளர்த்தியுள்ளது.

-Reuters  

Top