Images
  • heathrow airport
    (கோப்புப் படம்: REUTERS/Henry Nicholls)

அமெரிக்கா, பிரிட்டனுக்கு இடையில் பயணம் மீண்டும் தொடங்கலாம்

அமெரிக்க, பிரிட்டிஷ் தலைவர்கள் இரு நாடுகளுக்கு இடையில் பயணங்களை மீண்டும் தொடங்குவது குறித்துப் பேசவிருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக முதல்முறையாகத் திரு. ஜோ பைடன் பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு நடைபெறவிருக்கும் G7 உச்சநிலைச் சந்திப்புக்கு முன்னதாக, அவர் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனைச் (Boris Johnson) சந்திக்கவிருக்கிறார்.

இந்நிலையில், அடுத்தமாதத் தொடக்கம் வரை அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் குறைவு என்று அமெரிக்க, பிரிட்டிஷ் விமானச் சேவை நிறுவனங்கள் நம்புகின்றன.

-Reuters

Top