Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கடுமையாக நோய்வாய்ப்படுவதையும் மரணத்தையும் தவிர்க்க தடுப்பூசிகள் உதவுகின்றன: அமெரிக்கா

கடுமையாக நோய்வாய்ப்படுவதையும் மரணத்தையும் தவிர்ப்பதில், COVID-19 தடுப்பூசிகள் நன்கு செயல்படுவதாக, அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

கடுமையாக நோய்வாய்ப்படுவதையும் மரணத்தையும் தவிர்ப்பதில், COVID-19 தடுப்பூசிகள் நன்கு செயல்படுவதாக, அமெரிக்கச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட அமெரிக்கர்களிடையே, 6000-க்கும் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்களே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 மில்லியன் பேரில் அந்த எண்ணிக்கை, 0.01 விழுக்காட்டுக்கும் குறைவே.

அமெரிக்காவிலுள்ள பெரியவர்களில் பாதிப்பேர், குறைந்தது ஒரு தடுப்பூசியை மட்டுமாவது போட்டுக்கொண்டுள்ளனர்.

16 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் இப்போது, அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும். தினமும், மில்லியன்கணக்கானோர் அங்கே தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்