Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: மின்சிகரெட்டுகளைப் புகைத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48க்கு உயர்வு

அமெரிக்காவில் இந்த ஆண்டு மின்சிகரெட்டுகளைப் புகைத்து மாண்டோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: மின்சிகரெட்டுகளைப் புகைத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48க்கு உயர்வு

படம்: AFP/JUSTIN SULLIVAN

அமெரிக்காவில் இந்த ஆண்டு மின்சிகரெட்டுகளைப் புகைத்து மாண்டோர் எண்ணிக்கை 48ஆக உயர்ந்துள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை மின்சிகரெட்டால் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,291 ஆகப் பதிவாகியுள்ளது.

மாண்ட 29 நோயாளிகளின் நுரையீரலிலும் தடை செய்யப்பட்ட கஞ்சாவை உள்ளடக்கிய ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ரசாயனம் எவ்வாறு மின் சிகரெட்டில் சேர்க்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மின்சிகரெட்டுக்குப் பல நாடுகள் தடை விதித்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்