Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா 500 மில்லியன் முறை போடக்கூடிய அளவில் Pfizer தடுப்புமருந்துகளை வாங்கி உலக நாடுகளுக்கு வழங்கவிருக்கிறது

அமெரிக்கா, அடுத்த ஈராண்டுகளில் 500 மில்லியன் முறை போடக்கூடிய அளவில் Pfizer தடுப்புமருந்துகளை வாங்கி, சுமார் 100 நாடுகளுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்க ஊடக அறிக்கை கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா 500 மில்லியன் முறை போடக்கூடிய அளவில் Pfizer தடுப்புமருந்துகளை வாங்கி உலக நாடுகளுக்கு வழங்கவிருக்கிறது

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

அமெரிக்கா, அடுத்த ஈராண்டுகளில் 500 மில்லியன் முறை போடக்கூடிய அளவில் Pfizer தடுப்புமருந்துகளை வாங்கி, சுமார் 100 நாடுகளுக்கு வழங்கவிருப்பதாக அமெரிக்க ஊடக அறிக்கை கூறியுள்ளது.

ஆனால் அதுபற்றி வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்து இவ்வாண்டும் எஞ்சியவை அடுத்த ஆண்டும் விநியோகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராகத் திரு. ஜோ பைடன் முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் அது பற்றிய தகவல் வந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஏழை நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதத்தை அதிகரிக்கும்படி அமெரிக்காவுக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்