Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் குறைந்துவரும் கிருமித்தொற்று விகிதம்

அமெரிக்காவில் குறைந்துவரும் கிருமித்தொற்று விகிதம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது.

தினசரி கிருமித்தொற்றுக்கு ஆளாவோர், உயிரிழப்போர் ஆகியோரின் சராசரி விகிதம் ஜனவரியை விட 80 விழுக்காடு குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன.

அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 30 விழுக்காட்டினருக்கு இரு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

43 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் முதல் தடுப்பூசி போட்டுள்ளதாக, அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் குறிப்பிட்டது.

இருப்பினும், உருமாறிய புதிய வகைக் கிருமிகள் பரவி வருவதால், அமெரிக்கா கூட்டு எதிர்ப்புச் சக்தியை அடைவது கடினம் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்