Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகில் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

உலக அளவில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -
உலகில் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

படம்: REUTERS

உலக அளவில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டியுள்ளது.

உலகில் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அங்கு நோய்த்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 400,000ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் சுமார் 23 மில்லியன் பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

உலகில் நோய்த்தொற்றால் மாண்டவர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய கிருமி, வரும் மார்ச் மாதத்துக்குள் அமெரிக்காவில் பெருமளவு பரவக்கூடும் என்று அங்குள்ள தொற்று நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது அங்கு 76 பேருக்கு பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய கிருமி, மக்களை மோசமாகப் பாதிக்கும் என்பதற்குச் சான்று ஏதும் இல்லை. ஆனால், அது எளிதில் பரவக்கூடிய அபாயம் அதிகம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்