Images
  • usa gov
    (படம்: AFP Photo)

அமெரிக்கா : நாயைச் சுடப்போய் மாதைக் கொன்ற அதிகாரி

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் தம்மை நோக்கி ஓடிவந்த நாயைச் சுடப்போய் அது தவறுதலாகக் ஒரு மாதின்மேல்பட்டது.

அந்த மாது பின்னர் மாண்டார்.

ஆர்லிங்டன் (Arlington) வட்டாரத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அதிகாரி நாயைத் திரும்பத் திரும்பச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

நாயின் உரிமையாளர் என்று கருதப்படும் 30 வயது மாது, சம்பவத்துக்குப் பிறகு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மாண்டார்.

Top