Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: Thanksgiving விடுமுறையின்போது COVID-19 பரவல் கடுமையாகலாம்

அமெரிக்காவில் Thanksgiving விடுமுறையின்போது நோய்ப்பரவல் கடுமையாகலாம் என்று அஞ்சப்படுகிறது. 

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் Thanksgiving விடுமுறையின்போது நோய்ப்பரவல் கடுமையாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

குளிர்காலத்தின்போது மேலும் அதிகமானோர் வீட்டில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

குடும்பத்தினரைக் காண பயணம் செய்வோர் எண்ணிக்கை, நோய்ப்பரவலுக்கு முன் இருந்த நிலைகளை எட்டலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவின் 30 மாநிலங்களில் நோய்ப்பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அந்நாட்டில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் தினசரி எண்ணிக்கை 100,000ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது.

விடுமுறை காலத்தில் நோய்ப்பரவல் கடுமையாகக்கூடுமென அஞ்சப்படுவதால், அமெரிக்கா, Pfizer, Moderna மருந்தாக்க நிறுவனங்களுடன் booster எனும் கூடுதல் தடுப்பூசிகளைப் பெற நேற்று ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜெர்மனி, டென்மார்க உள்ளிட்ட 13 ஐரோப்பிய நாடுகள், அதன் பயண எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்