Images
  • F-35 jets
    படம்: Pixabay 

அமெரிக்கா: F-35 ரகப் போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்

அமெரிக்க இராணுவம் அதன் F-35 ரகப் போர் விமானங்களின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் சவுத் கரோலைனாவில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட எரிபொருள் குழாய்கள் சோதனை செய்யப்படுகின்றன. அந்தக் குழாய்களில் பல கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

உலகில் ஆக விலையுயர்ந்த ஆயுதங்களில் F-35 ரகப் போர் விமானமும் ஒன்று. வெகுகாலம் நீடிக்கவிருக்கும் அந்த விமானங்களின் ஒட்டுமொத்த உலக விற்பனை மூவாயிரத்தை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் குழாய்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட பின்னர்,F-35 ரகப் போர் விமானங்கள் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.


Top