Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்புமருந்துக் கடப்பிதழ் நடைமுறையைத் தற்போதைக்கு ஆதரிக்கமாட்டோம்: உலகச் சுகாதார நிறுவனம்

COVID-19 தடுப்புமருந்துக் கடப்பிதழ் நடைமுறையைத் தற்போதைக்கு ஆதரிக்கமாட்டோம்: உலகச் சுகாதார நிறுவனம்

வாசிப்புநேரம் -

COVID-19 தடுப்புமருந்துக் கடப்பிதழ் நடைமுறையைத் தற்போதைக்கு ஆதரிக்கப்போவதில்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்புமருந்து நோய்த்தொற்றை முற்றிலும் தடுக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று நிறுவனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹாரிஸ் (Margaret Harris) கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அது எதிராக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவின் COVID-19 தடுப்புமருந்துகளான Sinopharm, Sinovac ஆகியவற்றை உலகச் சுகாதார நிறுவனம்
அவசர நிலைக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்குமா என்பது இம்மாத இறுதியில் தெரியவரும் என்று திருவாட்டி ஹாரிஸ் கூறினார்.

தடுப்பு மருந்துகளை அதிகம் வாங்கிய நாடுகள் 10 மில்லியன் முறை போடப்படும் தடுப்புமருந்தை ஏழை நாடுகளுக்கு உடனடியாகக் கொடுத்து உதவுமாறு உலகச் சுகாதார நிறுவனம் கடந்த மாதம் கேட்டுக்கொண்டது.

உலக நாடுகளிடமிருந்து தடுப்புமருந்துகளை அதிகம் எதிர்பார்ப்பதாகத் திருவாட்டி ஹாரிஸ் கூறினார்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்