Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எந்தெந்த COVID-19 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? - விவரங்கள்

உலக நாடுகள் பல, அதன் மக்களுக்கு COVID-19 தடுப்பூசிகளை வேகமாகப் போட்டுவருகின்றன.

வாசிப்புநேரம் -

உலக நாடுகள் பல, அதன் மக்களுக்கு COVID-19 தடுப்பூசிகளை வேகமாகப் போட்டுவருகின்றன.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, தடுப்பூசிதான் ஒரே வழி என்பதால், நாடுகள் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதிலும், கொள்முதல் செய்வதிலும் தீவிரமாக உள்ளன.

சில தடுப்பு மருந்துகளின் செயல்திறன் திருப்தி அளிக்கும்வகையில் உள்ளதாக, நிபுணர்கள் சான்றளித்துள்ளனர்.

சில தடுப்பூசிகள், அரிதாகச் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.

தற்போது, 89 வகையான தடுப்பு மருந்துகள் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் 23, இறுதிக்கட்டச் சோதனையில் உள்ளன.

அவைபோக, குறைந்தது 77 தடுப்பூசிகள் விலங்குகளுக்குக் கொடுக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை, 8 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு மக்களுக்குப் போடப்பட்டு வருகின்றன.

5 தடுப்பூசிகளின் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

4 தடுப்பு மருந்துகளின் சோதனைகள், கைவிடப்பட்டுள்ளன.

அனுமதி வழங்கப்பட்டுள்ள சில முன்னணி COVID-19 தடுப்பூசிகள் : விவரங்கள்

Pfizer-BioNTech

  • தயாரிப்பு : அமெரிக்கா - ஜெர்மனி
  • சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன

Moderna

  • தயாரிப்பு : அமெரிக்கா
  • சிங்கப்பூர், சுவிட்ஸர்லந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன

Gamaleya

  • தயாரிப்பு : ரஷ்யா
  • ரஷ்யாவில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு ஒப்புதல்

Oxford-AstraZeneca

  • தயாரிப்பு : பிரிட்டன் - ஸ்வீடன்
  • பிரேசில், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
  • இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாகக் கூறி, இந்தத் தடுப்பூசிப் பயன்பாட்டை டென்மார்க் நிறுத்தி வைத்துள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியம், விநியோக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் போகலாம்.

Johnson & Johnson

  • தயாரிப்பு : அமெரிக்கா - பெல்ஜியம்
  • அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
  • இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாகக் கூறி, இந்தத் தடுப்பு மருந்தின் பயன்பாட்டைச் சில நாடுகளும் மாநிலங்களும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

Vector Institute:

  • தயாரிப்பு : ரஷ்யா
  • ரஷ்யா, துர்க்மெனிஸ்தானில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Sinopharm

  • தயாரிப்பு : சீனா
  • சீனா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன் ஒப்புதல் அளித்துள்ளன

Sinovac

  • தயாரிப்பு : சீனா
  • இந்தோனேசியா, மலேசியா, சீனா ஒப்புதல் அளித்துள்ளன

Bharat Biotech

  • தயாரிப்பு : இந்தியா
  • இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் சிலவற்றில், அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்