Images
  • Vaping
    (படம்: AFP/PAUL J. RICHARDS)

மின்-சிகரெட்டுகள் இதயத்தைப் பாதிக்கக்கூடும் - ஆய்வு


இளையர்களிடையே பிரபலமாக இருக்கும் மின்-சிகரெட்டுகள் இதயத்தைப் பாதிக்கக்கூடும் என்று Cardiovascular Research சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் மின்-சிகரெட்டுகள் சம்பந்தப்பட்ட நுரையீரல் பாதிப்புச் சம்பவங்கள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய்த் தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மின்-சிகரெட்டுகளில் நிக்கோட்டின் உள்ளது. அது இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கக்கூடியது.

மின்-சிகரெட்டுகளைப் புகைக்கும்போது, அதில் உள்ள மற்ற பொருள்கள் வீக்கம், சீரற்ற ரத்தவோட்டம் ஆகிய பிரச்சினைகளை உண்டாக்கும் என்று ஆய்வு குறிப்பிட்டது.

 

Top