Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

CanSino Biologics தடுப்பூசியின் செயல்திறன் காலப்போக்கில் குறையலாம்

சீனாவின் CanSino Biologics நிறுவனம் தயாரித்துள்ள ஒரு முறை போடக்கூடிய COVID-19 தடுப்பூசியின் செயல்திறன் காலப்போக்கில் குறையலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

வாசிப்புநேரம் -

சீனாவின் CanSino Biologics நிறுவனம் தயாரித்துள்ள ஒரு முறை போடக்கூடிய COVID-19 தடுப்பூசியின் செயல்திறன் காலப்போக்கில் குறையலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் 6 மாதங்கள் வரை அதன் செயல்திறன் 50 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கும் என்று அது குறிப்பிட்டது.

தடுப்பூசிக்கான சோதனையில் முதல் முறை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்குப் பின் இன்னொரு முறை தடுப்பூசி போடப்பட்டது.

அதன் மூலம், கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு அதிகரிக்கலாம் என நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி, ஸு டாவ் தெரிவித்தார்.

6 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒருமுறை தடுப்பூசி போடும்போது, அதன் செயல்திறன் சுமார் 10 மடங்குவரை, 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயரலாம் என்று கூறப்பட்டது.

இதுவரை சீனா, பாகிஸ்தான், ஹங்கேரி, மெக்சிகோ ஆகிய நாடுகளில் அந்தத் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

- Reuters/ta 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்