Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அன்பர் தினப் பரிசாக சுவாசக்கவசங்கள், கிருமிநாசினிகள்

அன்பர் தினத்திற்கு விதவிதமான பூச்செண்டுகள் கொடுத்து மக்கள் அவர்களது அன்பை வெளிப்படுத்திப் பார்த்திருப்போம். 

வாசிப்புநேரம் -

அன்பர் தினத்திற்கு விதவிதமான பூச்செண்டுகள் கொடுத்து
மக்கள் அவர்களது அன்பை வெளிப்படுத்திப் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 கிருமித்தொற்று காரணமாக சிலர் வித்தியாசமான பரிசுகளைக் கொடுத்து வருகின்றனர்.

ஹாங்காங்கில் உள்ள பூச்செண்டுக் கடைகள் எப்போதும் அன்பர் தினத்திற்காகப் பல வகையான வியாபார உத்திகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் கிருத்தொற்று பயத்தால் இம்முறை
அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

அதனால் அங்கு பூ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மக்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்த வேறு வழிகளை நாடுகின்றனர்.

தற்போது அதிக தட்டுப்பாடு உள்ள பொருள்களான சுவாசக்கவசங்கள், கிருமிநாசினிகளை ஒன்றுசேர்த்துப் பொட்டலமிட்டு அன்புக்குரியவர்களுக்கு பரிசளிக்கின்றனர்.

அந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதைப் பலரும் பகிர்ந்துவருகின்றனர்.

மக்கள் வெளியேவரத் தயங்குவதால் ஹாங்காங்கின் சில பகுதிகளில் சினிமா அரங்குகள், கடைத்தொகுதிகள் வெறுச்சோடிக் காணப்படுகின்றன.






 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்