Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்கா: கழிக்கப்படும் உணவுப் பொருள்கள் பசி தீர்க்க உதவுகின்றன

தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி உணவுப்பொருள்கள் குப்பையில் சென்று சேர்வதுண்டு.

வாசிப்புநேரம் -
தென்னாப்பிரிக்கா: கழிக்கப்படும் உணவுப் பொருள்கள் பசி தீர்க்க உதவுகின்றன

(படம்: AFP / Michele Spatari)

தென்னாப்பிரிக்காவில் தயாரிக்கப்படும் மூன்றில் ஒரு பகுதி உணவுப்பொருள்கள் குப்பையில் சென்று சேர்வதுண்டு.

இப்போது அந்த நிலையில் சற்று மாற்றம், பேரங்காடிகளில் கழிக்கப்படும் காய்கறிகள் அறநிறுவனங்களுக்குச் சென்று சேர்கின்றன.

நோய்ப்பரவலுக்கு முன்னர், தென்னாப்பிரிக்காவில் நாள்தோறும் சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பசியால் வாடினர்.

காலாவதியாகும் உணவுப் பொருள்களை விற்பதில் சட்டச் சிக்கல் இருப்பதால், தயாரிப்பாளர்கள் அவற்றை வீசி விடுவதுண்டு.

ஆனால் கிருமிப்பரவல் பாதிப்பு, முடக்கம் ஆகியவற்றுக்கு இடையே, உணவுத் தயாரிப்பாளர்கள் காலாவதியாகும் காய்கறிகளை நன்கொடையாகக் கொடுக்கின்றனர்.

தொண்டு அமைப்புகள் அவற்றைச் சேகரித்து, சுத்தம் செய்து நகரம் முழுவதும் உள்ள உணவு அறநிறுவனங்களிடம் கொடுக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறை முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது,சுமார் 47 விழுக்காட்டுக் குடும்பங்கள் உணவு வாங்கப் பணம் இல்லாமல் தவித்ததாய் ஓர் ஆய்வு தெரிவித்தது.

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து, தென்னாப்பிரிக்காவில் 2 மில்லியன் பேர் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாய் Oxfam அமைப்பின் ஆய்வு தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்