Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 பற்றிய தவறான தகவலை வெளியிட்ட நாட்டு அதிபர் ஒருவரின் Facebook கணக்கு முடக்கப்பட்டது... யார் அவர்?

வெனிசுவேலா அதிபரின் Facebook கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 பற்றிய தவறான தகவலை வெளியிட்ட நாட்டு அதிபர் ஒருவரின் Facebook கணக்கு முடக்கப்பட்டது... யார் அவர்?

(படம்: AFP/JHONN ZERPA)

வெனிசுவேலா அதிபரின் Facebook கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் உறுதிப்படுத்தப்படாத வழிமுறை ஒன்றை அதிபர் நிக்கோலஸ் மடூரோ (Nicolas Maduro) ஆதாரம் ஏதுமின்றித் தமது கணக்கில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்பட்டது.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அவர் கார்வட்டிவிர் (Carvativir) என்னும் கஷாயம், எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் COVID-19 நோயை குணப்படுத்தும் என்று, தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் ஏதும் இல்லை என மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

போலித் தகவல்களுக்கெதிரான Facebook நிறுவனக் கோட்பாடுகளை மீறியதால், அந்த கஷாயத்தை அருந்துமாறு மக்களை ஊக்குவிக்கும் அவரது காணொளிப் பதிவு நீக்கப்பட்டது.

மேலும், Facebook கோட்பாடுகளைப் பல முறை மீறியதால், அதிபர் மடூரோவின் கணக்கு 30 நாள்களுக்கு முடக்கப்பட்டது.

அந்தக்காலக்கட்டத்தில், எதையும் பதிவேற்ற முடியாது.

COVID-19 நோய்த்தொற்றை குணப்படுத்த, இப்போதைக்கு மருந்து ஏதும் இல்லை என்ற உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பத் தனது கோட்பாடு வரையப்பட்டுள்ளதாக Facebook குறிப்பிட்டது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்