Images
  • vichai fans
    (படம்: Joe Giddens/PA via AP)

காலஞ்சென்ற லெஸ்ட்டர் சிட்டி அணி உரிமையாளருக்கு அஞ்சலிப் பேரணி

காலஞ்சென்ற லெஸ்ட்டர் சிட்டி காற்பந்து அணியின் உரிமையாளர் விச்சை ஸ்ரீவதனபிரபாவுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான காற்பந்து ஆர்வலர்கள், பேரணி நடத்தியுள்ளனர்.

லெஸ்ட்டர் நகரில் அவர்கள் திரண்டனர்.

தாய்லந்துச் செல்வந்தரான திரு விச்சை பயணம் செய்த ஹெலிகாப்டர் கடந்த மாதம் லெஸ்ட்டர் நகரில் உள்ள கிங் பவர் (King Power) விளையாட்டு அரங்கத்துக்கு வெளியில் விழுந்து நொறுங்கியது.

அதில் இருந்த அவரும், மேலும் 4 பேரும் மாண்டனர்.

Top